top of page

எங்க ஊரு காட்டிலே - Enga Ooru Kaattilae எங்கள் முன்னோடிப் படம் -  Our pilot film in Tamil 

Sivaraman, shortly called Siva, is a simple villager who earns his living from his land and from working in others’. He is known for solving the problems that come about with his practical understanding of the situation. His loving wife, Uma, also works in the fields along with Siva. Uma is hardworking and takes care of all of the household duties as well.

Nine-year-old Saravanan was born after many long years of Uma and Siva’s marriage. He is the apple of their eyes and the heart of their hearts. 

Saravanan is playful and kind to everyone.

When Saravanan was hit with a problem that could drastically affect his future, how did Siva, who found practical solutions for many hurdles in his life, handle it? How did Uma take it? And above all, did Saravanan succumb to what he faced? Or did he survive it?

Summary Awards.png

தனது நிலத்திலும் பிறர் நிலத்திலும் விவசாயவேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றும் சிவா என்று அழைக்கப்படும் சிவராமன் ஒரு சாதாரணக் கிராமத்துவாசி. எனினும் எதார்த்த அறிவு கொண்டு சிக்கல்களைத் தீர்க்கும் அறிவு கொண்டவர். அவர் அன்பு மனைவி உமா கடும் உழைப்பாளி - சிவாவுடன் விவசாய வேலை செய்வதோடல்லாமல் வீட்டு வேலைகளையும் செய்து அனைவருக்கும் ஆதரவாக இருப்பவர்.

 

சிவா உமா இருவருக்கும் திருமணம் ஆகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை சரவணன். அவனுக்கு இப்போது ஒன்பது வயது. உமா சிவா - இருவரின் கண்ணுக்குக் கண்ணாக இதயத்திற்கு இதயமாக இருக்கும் அன்புக் குழந்தை சரவணன்.

சரவணன் அனைவரிடமும் அன்பாக இருப்பான் எப்பொழுதும் குதூகலமாக இருப்பான்.

தன் எதிர்காலத்தைப் பறிக்கக் கூடிய ஒரு சோதனை சரவணனைத் தாக்கி எல்லோரையும் தவிக்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்க வாழ்க்கையில் எதார்த்தமாகப் பல சிக்கல்களைத் தீர்த்த சிவா இந்தச் சோதனையை எப்படிக் கையாண்டார்? உமா எப்படி இதை அணுகினார்?

எல்லாவற்றுக்கும் மேலாகச் சரவணன் இந்தச் சோதனைக்கு வீழ்ந்தானா? இல்லை வாழ்ந்தானா?

EOK_New_Tamil.png
bottom of page